NINAITHU MARUGUTHADI NENJAM - நினைத்து மறுகுதடி நெஞ்சம்

NINAITHU MARUGUTHADI NENJAM  - நினைத்து மறுகுதடி நெஞ்சம்
இம்முறை நூலகத்திலிருந்து எடுத்த இந்த புத்தகம் மிகவும் அருமையானதொரு புத்தகம். உமா பாலகுமார் அவர்கள் எழுதிய இந்த புத்தகத்தில் உள்ள இரு கதைகளுமே அவ்வளவு சீக்கிரம் மறக்கக் கூடியவை அல்ல

முதல் கதையான நினைத்து மறுகுதடி நெஞ்சத்தில் விருது நகரிலிருந்து மாற்றலாகி கேரளத்தின் ஆலப்புழைக்கு வந்துள்ள குடும்பத்தின் தலைவி சியாமளா. சியாமளாவின் துள்ளி திரியும் மகளான செளம்யா தான் கதை நாயகி. வேலை தேடிக் கொண்டிருக்கும் அவளுக்கு பக்கத்து வீட்டு கருணாகரன் அங்கிள் தான் வேலை செய்யும் ஸ்டார் ஹோட்டலில் ரிசப்ஷனிஸ்ட்டாக வேலை வாங்கித் தருகிறார்.

அங்கு நாயகனும் ஹோட்டலின் முதலாளியுமான விதுரனுடன் பழக்கமாகிறது. இருவரும் நேசிக்க ஆரம்பிக்கின்றனர். விதுரனின் தந்தை இவர்கள் காதலுக்கு ஒப்புதல் தெரிவித்து செளம்யாவின் வீட்டுக்கு செல்கிறார். அங்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. செளம்யாவின் தாய் தான் விதுரனுக்கு தாய் என்று விதுரனின் தந்தை சொல்கிறார். சியாமளாவை நடத்தை கெட்டவள் என்று கூறி அங்கிருந்து செல்ல இளசுகள் இருவரும் அதிர்ச்சிக்குள்ளாகிறார்கள். ஆனால் உண்மையில் நடந்தது என்னகடைசியில் இருவரும் குடும்பத்தார் ஆசீர்வாதத்துடன் திருமணம் செய்து கொள்கின்றனர். அது எப்படிபடித்தால் தான் அதன் சுவாரசியத்தை புரிந்து கொள்ள முடியும்.

அடுத்த கதை உனக்கென தவமிருந்தேன்” இதுவும் ஒரு காதல் கதையே….நித்திதாரா இருவரும் கல்லூரி தோழிகள். இருவரில் தாரா காதல் வயப்பட்டிருந்தாள். அவளது வீட்டில் சொந்தம் விட்டு விடக் கூடாது என்று அத்தை மகனை பேசி முடித்திருந்தனர். தாரா அவளது காதல் பற்றி அம்மாவிடம் தெரிவித்தும் ஒப்புதல் கிடைக்க வில்லை. இதைப் பற்றியும் தன் காதலனுடன் எப்படி சேருவது என்றும் சொல்லிக் கொண்டிருந்த தாராஒரு வழியாக திருமணத்திற்கு ஒப்பு கொண்டுள்ளாள். இந்த நேரத்தில் ப்ராஜெக்ட் விஷயமாக சென்னையிலிருந்து வந்த நித்தியையும் தன்னுடன் அழகு நிலையத்திற்கு கூட்டிச் சென்றுஅங்கிருந்து நித்திக்கும் தெரியாமல் ஓடிப் போய் தன் காதலனுடன் திருமணம் செய்து கொள்கிறாள்.


இது மாப்பிள்ளை வீட்டாருக்கு தெரிந்துமாப்பிள்ளை நொந்து போய் கிடக்கையில்அங்கிருந்த நித்தியை மணப்பெண்ணாக ஏற்க சொல்கின்றனர். மாப்பிள்ளை யாரென அப்போது தான் நித்தி தெரிந்து கொள்கிறாள். சிறுவயதில் கோவையில் அக்கம் பக்கம் வீடுகளில் வசித்து இருவர் குடும்பமும் ஏற்கனவே பரிச்சயமானவர்கள் தான். அதுவும் போக நித்திக்கு அப்போதே நரேன் மீது காதல் ஏற்பட்டிருந்தது. வெளியே சொல்லாமல் மனதுக்குளேயே வைத்திருந்தாள். இப்போ தானாகவே அந்த வாய்ப்பு வர ஒப்புக் கொண்டு விட்டாள்.

எல்லோருக்கும் சம்மதம். ஆனால் மாப்பிள்ளையான நரேனுக்கு பெண்கள் எல்லோருமே ஏமாற்றுக்காரர்கள் என்று மனதில் பதிந்து விட எரிச்சலையும்,கோபத்தையும் நித்தி மீது காட்டுகிறான்.  இதையெல்லாம் மீறி நித்தி அவன் மனதுக்குள் ஆழ பதிந்து கொள்கிறாள். குடும்பத்துக்காக நல்ல விஷயங்களை செய்து அவன் மனதில் இடம் பிடிக்கிறாள். காதலை அவரவர் மனதுக்குள்ளேயே வைத்து கடைசியில் தான் அதை வெளிக்காட்டி வாழ்வில் இணைகின்றனர். இதையும் நீங்கள் வாங்கிப் படித்து அதன் சுவையை உணருங்கள்.

Books Detail
Book Status Looks Like New
No Of Pages 280
Book Cover Paper Back
Author Name Uma Balakumar
Online Store Price Rs.90

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good
  • Views: 4329
  • Author : Uma Balakumar
  • ISBN No : TA002
  • Availability: Out Of Stock
1 Product(s) Sold
  • ₹60.00

Tags: Fiction, Tamil Fiction - தமிழ், NINAITHU MARUGUTHADI NENJAM - நினைத்து மறுகுதடி நெஞ்சம், Uma Balakumar